திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 05:04
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா சிறப்பாக நடந்தது. காலையில் அத்திமர மூலவர் விக்ரகத்திற்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மதுரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள் காவடிகள் , பால்குடங்கள் எடுத்து வந்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவர்கள் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை முடிந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்து. வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பக்தர்களின் வசதிக்காக நிர்வாகம் சார்பில் கோயில் முன்பு பெரியரத வீதி, சன்னதி தெருவில் தேங்காய் நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.