திருமுருகன் பூண்டி திருமுருக நாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்தர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 05:04
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா விமர்சையாக நடைபெற்றது. கொங்கேழு ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்த திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்தர விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள்,மகாதீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.