பண்ருட்டி தர்கா சந்தனக் கூடு திருவிழா இன்று நடக்கிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2012 10:12
பண்ருட்டி: பண்ருட்டி ஹஜரத் நூர்முகமது அவுலியா தர்கா கந்தூரி சந்தனக் கூடு திருவிழா இன்று நடக்கிறது. பண்ருட்டி ஹஜரத் நூர்முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் திருவிழா கடந்த 9ம் தேதி பான்வாஜமா பக்கீர் தர்காவிற்கு வருகை புரிதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (10ம் தேதி) இரவு 8 மணியளவில் விமரிசையாக பேண்டு வாத்தியம் முழங்க, குதிரையில் கொடி ஊர்வலமாக வந்து கொடியேற்றுதல் நடந்தது. நேற்று (11ம் தேதி) இரவு 7 மணிக்கு மவுலுத் ஷரீப் ஒதி சீரணி வழங்குதல் நடந்தது. இன்று 12ம் தேதி மாலை அவுலியாவின் ரவுலா ஷரிப் (சமாதி) பீடத்தை பூவணி போர்வையால் அலங்கரித்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரவுலா ஷரிபுக்கு சந்தனம் அணிவித்து சந்தனக் கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு சகல மேள வாத்தியங்களுடன் சந்தனக் கூடு ஊர்வலம் நடக்கிறது. நாளை (13ம் தேதி) மாலை 6 மணிக்கு தர்காவின் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்கு அலங்காரம் செய்தல், 14ம் தேதி தர்காவில் குர்ஆன் ஷரிப் சத்தம் செய்து ஒதுதல் நடக்கிறது. 15ம் தேதி இரவு 9 மணிக்கு தமிழ் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டித் தலைவர் தாஜூதீன், செயலர் குத்தூஸ் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.