மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, டிச.,16 முதல் நடை திறப்பு நேரம் மாற்றப்படுகிறது. தினமும் இரவு 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணி முதல் 6.45 மணி வரை திரை போடப்படும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், மதியம் 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 4 மணி முதல் 4.45 மணி மற்றும் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திரை போடப்படும். இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடத்தப்பட்ட பின், இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கு திரை போடப்படும். சுவாமி புறப்பாடு மற்றும் வெள்ளியன்று திரை போடுவது மாறுதலுக்குட்பட்டது.