அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; கோயில் வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 06:04
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, இது குறி்தது விசாரணை நடைபெற்று வருகிறது
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது குறித்து அயோத்தியில் உள்ள சைபர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சைபர் செல் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. நேற்று திங்கள்கிழமை இரவு ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. அயோத்தியில் மாவட்டம் முழுதம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கோயில் வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் கோயில் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.