பதிவு செய்த நாள்
12
டிச
2012
10:12
உடன்குடி: உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலுக்கு 1008 பால்குடம் அபிஷேக பேரணி நடந்தது. உடன்குடி ஒன்றிய அகில பாரத இந்து மகாசபா சார்பில் குடும்பம் ஐஸ்வர்யம் பெறவேண்டியும்,குடும்பத்தில் செல்வம் பெருகிடவும், இந்துக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியும், 1008 பால்குடம் அபிஷேக பேரணிநடந்தது. பேரணிக்கு தமிழ்நாடு முருகபக்த பேரவை தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். சங்கரன்கோயில் சங்கரானந்தா சுவாமிகள் பேரணியை துவக்கி வைத்தார். அகில பாரத இந்து மகாசபா தமிழக தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் முத்தப்பா, செயலாளர் பொன்வெற்றிவேல், மாநில மாணவரணி தலைவர் சுரேஷ்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் முத்துக்குமார் , மாவட்ட அமைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் அருள் முருகன், பசுபதி, உடன்குடி ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய பொதுச்செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் தினேஷ், காமராஜ், ஒன்றிய பொருளாளர் சுவாமிநாதன், செயற்குழு உறுப்பினர் கார்த்தீசன், சாத்தனாகுளம் ஒன்றிய தலைவர் முருகன், நகர செயற்குழு உறுப்பினர்கள் குமார், கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் பகல் 4 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை உடன்குடி ஒன்றிய அகில பாரத இந்து மகாசபையினர் செய்திருந்தனர்.