புளியரை: இலத்தூர் மதுநாதர் கோயிலில் குமார சஷ்டியை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதல் நடக்கிறது. இலத்தூமுல் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் குமார சஷ்டி விழா எட்டு நாட்கள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது போல் இலத்தூர் கோயிலில் குமார சஷ்டி விழா நடைபெறும். இந்த ஆண்டு குமார ஷஷ்டி விழா இன்று துவங்குகிறது. அதிகாலை கணபதி ஹோமம், ஆறுமுகநயினாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. விழாவில் ஐந்து நாட்கள் சுவாமி வீதி உலாவருதலும், ஏழாம் நாள்முருகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. எட்டாம் நாள் ஆராட்டு விழாவும் இரவு ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சமுதாயத்தினர் மற்றும் பக்த மகா இந்து சமய நற்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.