எரியோடு பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் ரத மகா உற்ஸவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2025 04:04
எரியோடு; எரியோட்டில் பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர ரத மகா உற்ஸவ திருவிழா ஏப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9 நாட்கள் நடந்த விழாவில் முருகன் மாப்பிள்ளை சுவாமி அழைப்பு, திருக்கல்யாணம், தெப்பத்தில் ஊஞ்சலாடுதல், 8 நாள் இரவும் சுவாமி புறப்பாடு நடந்து வெவ்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளினார். திருவிழாவின் கடைசி நாள் நிகழ்வாக இன்று சுவாமி தெப்பத்தில் இருந்து எழுந்தருளி ஒவவொரு மண்டகபடி, திருக்கண்களுக்கும் மீண்டும் சென்று மஞ்சள் நீராடி கோயில் திரும்பினார். விழா ஏற்பாட்டினை நாடார் உறவின்முறை சங்கம், தேவஸ்தான குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.