அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமி பூஜை; கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2025 05:04
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் அருகில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி இன்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மஞ்சள், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.