பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
12:04
கோவை; காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் ஆத்மா சாந்தி அடைய, கோவை கோனியம்மன் கோவிலில், இந்து மக்கள் கட்சியினர் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள், 28 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களது ஆத்மா சாந்தி அடைய வேண்டி, கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் மோட்சதீபம் ஏற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட தொண்டர்கள் வழிபாடு செய்தனர். இந்துக்களை காப்பாற்ற பிரார்த்தனை செய்தனர்.
அதன்பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: நம் நாட்டில் இந்துக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் அரசியல் அனாதைகளாக மாறி விட்டனர். மேற்குவங்கத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறுகின்றனர். அரசியல் சாசன பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதி நிலவியது. அது பொறுக்காத பயங்கரவாதிகள் வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து மத அடிப்படையில் பிரிந்த ஜிகாதிகள், இந்துக்களுக்கு எதிரான வன்முறையை நடத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.