பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
11:04
ஆந்திர மாநிலம், திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்து, நேற்று இரவு, காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி விஜயேந்திரருக்கு, சர்வதீர்த்தகுளம் அருகில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திரர், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கர மடத்தில் முகாமிட்டு, சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு,காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு திரும்பினார். மடாதிபதி விஜயேந்திரருக்கு, சர்வதீர்த்தகுளம் அருகில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சி மடத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜையை துவங்க இருக்கிறார். வரும் மே மாதம், 2ம் தேதி, சங்கர மடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள ஆதிசங்கரர்ஜெயந்தி விழாவில்,காஞ்சி மடாதிபதிவிஜயேந்திரர் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார்.