பதிவு செய்த நாள்
01
மே
2025
05:05
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம், நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்று, இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில். சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற தலமான இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இன்று காலை நடந்தது. நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள், கோவிலின் எதிரே உள்ள கொடி மரத்தில், தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பிரம்மோற்சவ சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. உற்சவ மூர்த்திகளான விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இவ்விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மே -7ம் தேதி திருத்தேரோட்டம் மற்றும் மே -11ம் தேதி அகத்தியருக்கு காட்சி அருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.