பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2025 05:05
பெண்ணாடம்; பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7:00 மணிக்கு மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், 8:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (2ம்தேதி) சூரிய பிறை – சந்திர பிறை, 5ம் தேதி அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், 7ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வான வரும் 9ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 10ம் தேதி தீர்த்தவாரி, 11ம் தேதி கொடியிறக்கம், 12ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் தேர் பெருவிழா துவங்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.