காஞ்சி இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டினபிரவேசம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2025 10:05
காஞ்சிபுரம்; காஞ்சி சங்கரமடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று பட்டினபிரவேசம் மேற்கொண்டார். அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைய மடாதிபதி, சங்கர மடத்தில் இருந்து, தேனம்பாக்கத்தில் உள்ள சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு, நடைபாதையாக பட்டினபிரவேசம் மேற்கொண்டார். இந்த பட்டினபிரவேசம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து துவங்கியது. மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்து, இளைய மடாதிபதியை ஆசிர்வசித்ததார். கிழக்கு ராஜ வீதியில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோயிலில், பூக்கடை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினர், இளைய மடாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, பலவித மலர்களை துாவி வரவேற்றனர். இதேபோல, வழிநெடுகிலும் உள்ள பல்வேறு கோயில்களிலும், இளைய மடாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனம்பாக்கம் சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பட்டின பிரவேசம் நிறைவடைந்தது.