Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நலன் வேண்டி பேரூர் பட்டீஸ்வரர் ...  ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம்; வீதி உலா வந்து அருள்பாலித்த ஆதிசங்கரர் ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம்; வீதி உலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 மே
2025
11:05

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் கோவிலில் நேற்று, தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், தானுகந்த திருமேனியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா, ஏப்., 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான நேற்று, தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர், தேரடி, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா, கோவிந்தா’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர். ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். தேருக்கு முன் சென்ற ராமானுஜர் கோவில் யானை கோதையிடம் ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar