பதிவு செய்த நாள்
02
மே
2025
11:05
புதுச்சேரி; புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் கோவிலில், சிருங்கேரி சிவகங்கா மடம் சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இவ்விழா நேற்று மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஸ்ரீராம சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத பட்டாபிேஷக தியாகராஜர் ஆவாஹன பூஜை நடந்தது. பின்னர் திருஞானசம்பந்தர் குழுவினரின் இசை அமுதம், கொட்டாரக்கரை பாலமுரளி குழுவினரின் வாய்ப்பாட்டு, ஸ்ரீவில்லிபுத்துார் விஜயலட்சுமி குழுவினர் மற்றும் அரிமளம் பத்மநாபன் குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று (2ம் தேதி) காலை 8:00 மணிக்கு ஸ்ரீபக்த மீரா குழுவினர் இசை அமுதம், புதுச்சேரி மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி குழுவினர் பஜன், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் இசை அமுதம், நெய்வேலி லலிதா ராஜூலு குழுவினரின் வாய்ப்பாட்டு நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு யோகாஞ்சலி நாட்டியாலயா திவ்யப்ரியா பவனானி குழுவினர் இசை அமுதம், தேவசேனா பவனானி குழுவினர் பாட்டு, பானுமதி குழுவினர் வீணை, காயத்ரி கிரீஷ் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.