திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 10:05
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உடையவர் சேஷ வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற ராமானுஜர் ஜெயந்தி விழாவின் நிறைவாக நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு ராமானுஜர் புறப்பாடாகி அனைத்து சன்னதிகளிலும் மங்களாசாசனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள், ராமானுஜர், மணவாளமாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ராமானுஜர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இரவு 8:30 மணிக்கு ராமானுஜர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி சாற்றுமறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடந்தது. ஜீயர் தேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் ஏஜென்ட் கோலாகளன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.