தூத்துக்குடி கடலில் பெண் தெய்வ சிலை மீட்பு: தொல்லியல் துறை ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 10:05
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே மீன்பிடி தளத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப்படகில் பழுது பார்ப்பதற்காக கீழே இறங்கிய தொழிலாளர்கள், கடலுக்குள் புதைந்திருந்த ஒரு கற்சிலையை கண்டெடுத்தனர். அந்தக் கற்சிலை சுமார் 39 அங்குலம் உயரமும், 24 அங்குலம் அகலமும், சுமார் 150 கிலோ எடையுடையதுமான பெண் தெய்வ சிலையாகும். சிலையில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. கைகளில் பாசக்கயிறு, திரிசூலம் மற்றும் குங்குமச்சிமிழ் உள்ளன. மேலும்,சிங்க வாகனத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. சிலையின் நுட்பம் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.