பதிவு செய்த நாள்
05
மே
2025
12:05
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் பிரம்மோற்சவ விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சுப்ரபாத சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனத்திற்கு பின் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். இன்று முதல் காலை, மாலை யாகமும், இரவில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா உற்சவம் நடக்கிறது. வரும் 10 ம் தேதி மாலை 4:00 மணிக்கு பெருமாள், தாயார் திருக்கல்யாணமும், 12 ம் தேதி காலை 5:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. வரும், 13 ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், 15 ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.