பதிவு செய்த நாள்
05
மே
2025
12:05
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலுார் கிராமத்தில், செல்லியம்மன், மாரியம்மன், சகல சித்தி விநாயகர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நேற்று, கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 8:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், பிரவேசபலியும், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று, காலை 7:30 மணிக்கு யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட நீரானது, மூன்று கோவில்களின் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. இதேபோல, களியப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவிலிலும் நேற்று, கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.