பதிவு செய்த நாள்
05
மே
2025
12:05
பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன், புத்தக பூஜை, பாகவத கீர்த்தனம், பாகவத பாராயணம் நடந்தது. தொடர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வித்யா கோபால மந்திரார்ச்சனை நடத்தி, கல்வி வளர்ச்சிக்காக ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாணவர்கள் பூஜை செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிந்த பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், எல்.கே.ஜி., முதல் கல்லுாரி படிக்கும் மாணவர்கள் வரை, 300 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். பூஜையின் போது,‘ பெற்றோரை குழந்தைகள், மதிக்க வேண்டியதன் அவசியம்; தேசப்பற்று, இறை வழிபாடுகளில் இளைய தலைமுறையினர் ஈடுபாடு கொள்ள வேண்டியதன் அவசியம்; இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,’ குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் நிர்வாக குழுவினர், மாணவர்கள் பங்கேற்றனர்.