கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 12:05
கோவை; ராம் நகர் வி என். தோட்டம், முத்துமாரியம்மன் கோவில் 43ம் ஆண்டு சித்திரை விழா கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கோவில் வளாகம் முன்பு அக்னி கம்பம் நடுதல் அதை அடுத்து திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவியாக உருவெடுத்து அமர்ந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.