ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 03:05
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழாவை ஒட்டி கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை,11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பெருமாள் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று புதன்கிழமை மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6:00 மணிக்கு சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. மூன்றாம் நாள் கருட வாகன உற்சவமும், நான்காம் நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவை ஒட்டி திருவாய்மொழி சேவா காலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.