கூவம் திரபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 04:05
கூவம்; கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இங்கு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் இந்தாண்டு சித்தரை திருவிழா துவங்கியது. பின் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. நாளை இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். வரும் 14ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவையுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.