பதிவு செய்த நாள்
07
மே
2025
05:05
தேனி; வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வீட்டில் இருந்து ஊர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அம்மன் ஊர்வலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மண்டகப்படியில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். நாளை இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்க உள்ளது. இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால், பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
நடமாடும் ஏ.டி.எம்., இயந்திரங்கள் வைக்கலாமே; திருவிழாவிற்காக பலரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். ஆனால், போதிய அளவில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் இல்லாததால் பணம் எடுக்க சிரமப்படுகின்றனர். நிரந்தர ஏ.டி.எம்., இயந்திரங்கள் கோயில் அருகே மட்டுமே உள்ளன. தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள், ராட்டின மைதானம் ஆகிய பகுதிகளில் நடமாடும் ஏ.டி.எம்., வாகனங்களை பக்தர்கள் வசதிக்காக நிறுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.