சோளக்காட்டுபாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 05:05
கருமத்தம்பட்டி; சோளக்காட்டு பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கருமத்தம்பட்டி அடுத்த சோளக் காட்டுபாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 1 தேதி சாமி சாட்டுதலுடன் பூச்சாட்டு பொங்கல் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று இரவு அம்மை அழைத்தல் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.