பழநி கோயில் தங்கும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2012 10:12
பழநி: பழநியில் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதி அறைகளில் அடிப்படை வசதிகள் அதிகரிக்காமல், வாடகை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கும் விடுதிகளில் 250 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த அறைகளின் வாடகைகள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. அறைகளில் வசதிகள் அதிகரிக்கப்படவில்லை, பராமரிப்பு முறையாக இல்லை. கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. சீலிங் கான்கிரிட் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக ரூ.200 முதல் 720 வரை கட்டணம் உள்ள அறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அறைகளில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், தரைத்தளம் சேதமடைந்துள்ளது. அறைகளின் கட்டண விபரம் (பழைய கட்டணம் அடைப்புக்குள்): இராஜ அலங்கார இல்லம் ரூ.2500 (ரூ.720). கடம்பன் இல்லம் ரூ.300(ரூ. 100). என பல்வேறு தங்கும் விடுதிகளின் வாடகை மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. தண்டபாணி நிலையத்தில் தங்கியுள்ள பக்தர்களின் கருத்துக்கள்: அய்யனார் (புதுச்சேரி): சபரிமலைக்கு செல்வதற்காக 12பேர் கொண்ட குழுவாக பழநிக்கு சுவாமி தரிசனம் செய்யவந்துள்ளோம். கடந்தமுறை ரூ.250 தங்கும் அறைகளுக்கு வசூல் செய்தனர். இந்தாண்டு ரூ.450 வசூல்செய்கின்றனர். வசதிகள் இல்லை. குளியலறை, கழிப்பறைகள் மிகவும் மோசமாக உள்ளது. குழாய்கள் சேதமடைந்துள்ளது. செல்வி, உத்தமபாளையம்: கட்டண உயர்வு அதிர்ச்சியைத் தருகிறது. அறைகளில் வசதிகள் குறைவாக உள்ளது. கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.