பதிவு செய்த நாள்
14
டிச
2012
11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் இன்று கோலாகலமாக துவங்கியது. தமிழகத்தில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்திப்பெற்றது. நேற்றிரவு, 7 மணிக்கு, திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது. வைகுண்ட ஏகாதசி பகல்பத்து முதல் நாள் விழா இன்று காலை, 6 மணிக்கு, விருச்சிக லக்னத்தில், மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடுடன் துவங்குகிறது. 7 மணிக்கு, நம்பெருமாள் பகல்பத்து அர்ச்சுன மண்டபத்தை வந்தடைகிறார்.காலை, 7 மணி முதல், 7.45 மணி வரை, திரையிட்டு, 7.45 மணி முதல், மதியம், ஒரு மணி வரை, பொதுஜன ஸேவையுடன் அரையர் ஸேவை நடக்கிறது. ஒருமணி முதல், 2 மணி வரை, அலங்காரம் அமுது செய்ய திரை, 2 மணி முதல், 3 மணி வரை, திருப்பாவடை கோஷ்டி, 3 மணி முதல், 4 மணி வரை, வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படுகிறது.மாலை, 4 மணி முதல், 5.30 மணி வரை, பொதுஜன ஸேவையுடன் உபயக்காரர் மரியாதை, 5.30 மணி முதல், 6.15 மணி வரை, புறப்பாட்டுக்கு திரையிடப்படுகிறது. 6.15 மணிக்கு, நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்*முத்தங்கி ஸேவை: அரையர் ஸேவையில், "திருப்பல்லாண்டு முதல் இரண்டு பாசுரம், அபிநயம், வியாக்னம், பெரியாழ்வார் திருமொழி, 212 பாசுரங்கள்- முதலாயிரம் இசைக்கப்படுகிறது. காலை, 6.30 மணி வரை, மாலை, 6 மணி வரை, மாலை, 6.45 மணி முதல், இரவு, 8.30 மணி வரை, மூலவர் முத்தங்கி ஸேவை நடக்கிறது. இரவு, 8.30 மணிக்குமேல் மூலஸ்தான ஸேவை கிடையாது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சேஷசாயி, இணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி, சுழல்முறை அறங்காவலர் பராச்சர திருவேங்கடப்பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.