திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், 25 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.இங்கு 25 நிரந்தர மற்றும் இரண்டு கிரிவல உண்டியல்கள் உள்ளன. நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் 25 லட்சத்து 27 ஆயிரத்து 435 ரூபாய், 247 கிராம் தங்கம், 819 கிராம் வெள்ளி இருந்தது.கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஐயப்பா சேவா சங்கத்தினர் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.