நெய்க்காரப்பட்டி; பழநி அருகே 18ஆம் நுாற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டது. நெய்க்காரப்பட்டி அருகே கே. வேலுார் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் வீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன .இதை அறிந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்து ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: விவசாயி வீட்டில் கிடைத்த ஓலைச்சுவடி பதினெட்டாம் நுாற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்தது. நன்னெறி நுாலின் மாறுபட்ட பிரதியாக உள்ளது. உலகநீதி நுாலில் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என வரிகள் இருக்கும். உலக நீதியில் வேண்டாம் என முடியும். இந்த ஓலைச்சுவடியில் உள்ள பாடல்களில் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற அறிவுரையுடன் இந்தப் பாடலின் வரிகள் வேண்டும் என முடிந்துள்ளன. வெண்பா வடிவில் அமைக்கப்பட்டுள்ள பாடல்கள் உள்ளன. இதில் எட்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள ஐந்து பாடல்கள் சேதம் அடைந்துள்ளன. வள்ளி , தெய்வானை, முருகன் குறித்த பாடல்கள் அமைந்துள்ளன. ஓலைச்சுவடியின் மேல் ராமகுடும்பன் என பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.