பதிவு செய்த நாள்
20
மே
2025
10:05
சென்னை; பாரிமுனை, காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில், 1.51 கோடி ரூபாயிலான திருப்பணிகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1.51 கோடி ரூபாயில் பாலவிநாயகர், முருகன், நாகராஜா சன்னிதிகள் உட்பட, 17 திருப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த, 400 ஆண்டுகள்பழமையான இக்கோவிலுக்கு, செப்., 4ல் கும்பாபிஷேகம் நடத்தும்வகையில், திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். இக்கோவிலுக்கு, 3 கோடி ரூபாய் கோவில் நிதி, உபயதாரர் நிதி வாயிலாக, அறங்காவலர் குழு முயற்சியால் வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும், 28ம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்படும். அதன்பின், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அர்ப்பணிக்கப்படும். கோவில் நிலங்களை அளவிடும் பணி, மயிலாப்பூரில் துவக்கப்பட்டது. அதன் நீட்சியாக, 50,001வது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கர் பெரியபாளையத்திலும் அளவீடு செய்யப்பட்டது. தற்போது, 2,00,001 வது ஏக்கர் நிலத்தை அளவிடும் பணி, 21ம் தேதி ஸ்ரீபெரும்புதுாரில் துவக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.