தேய்பிறை அஷ்டமி; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 04:05
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் அருள்பாலித்தார்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பரிவார மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஐந்து கால பூஜை நடைபெற்றது. சந்தனம், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் பைரவர் எழுந்தருளினார். பூக்களால் சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பைரவரை தரிசனம் செய்தனர்.