பதிவு செய்த நாள்
20
மே
2025
04:05
ஆனைமலை; ஆனைமலை அருகே, வீரல்பட்டி கன்னிமார், விநாயகர், முருகர், கருப்பராயர் சுவாமி கோவிலலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஆனைமலை அருகே, வீரல்பட்டியில் கன்னிமார், விநாயகர், முருகர், கருப்பராயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 17ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. முதல் கால வேள்வி, வேள்வி நிறைவு, மூலத்திருமேனிகளுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, வேள்விச்சாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பாடு, விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, விநாயகர், கன்னிமார், முருகர், கருப்பராயர் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், திருமஞ்சன அலங்காரம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.