திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; 7 கிமீ நீண்ட வரிசை.. 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 04:05
திருப்பதி; திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3.74 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்று (23 ம் தேதி) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 7 கிமீ நீண்ட வரிசையில் 20 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் செய்தனர்.