காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 05:05
காரைக்குடி; காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா, கடந்த மே 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும், பக்தி உலாவும் இரவு தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த மே 20 ல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடந்தது..