மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் பூ பல்லக்கில் அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 05:05
வத்தலக்குண்டு; பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மண்டகப்படியில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பரம்பரை பட்டறைக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 350 கிலோ மல்லிகைப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பல வகையான பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மன் வரும் வழியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுண்டல் மற்றும் சர்க்கரை உள்ளிட்டவைகளை அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வழி நெடுங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.