Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் வடகரையில் மாரியம்மன் ... குக்கே சுப்ரமண்யர் கோவிலில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி குக்கே சுப்ரமண்யர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ஜோதிர் லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாமா?
எழுத்தின் அளவு:
12 ஜோதிர் லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாமா?

பதிவு செய்த நாள்

27 மே
2025
12:05

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள புராதான ஜோதிர் லிங்கங்களை, பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில், பெங்களூரு சீனிவாசபுரத்தில் கட்டப்பட்டு உள்ளது.


பெங்களூரு நகரில், கடல் மட்டத்தில் இருந்து 2,800 அடி உயரத்தில் அமைந்து உள்ள மலையில் இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணியை, 2002ல் ஸ்ரீசிவபுரி மஹா சுவாமிகள் துவக்கி வைத்தார். 2007ல் அவரது வாரிசான ஸ்ரீ மதுசூதனானந்த பூரி சுவாமிகள் திறந்து வைத்தார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களை குறிக்கும் வகையில் 12 ஜோதிர்லிங்கங்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஒவ்வொரு லிங்கத்துக்கும் தனித்தனி சன்னதிகள், விமான கோபுரங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஓம்காரேஸ்வர ஜோதிர்லிங்கம் 6 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் மத்திய பகுதியில் ஸ்படிக ஸ்ரீ யந்திரம் உள்ளது. ஸ்ரீ வைத்தியநாதா, ஸ்ரீ விஸ்வநாதா, ஸ்ரீ பீமசங்கரா, ஸ்ரீ திரியம்பகேஸ்வரா, ஸ்ரீ குஷ்மேஸ்வரா, ஸ்ரீ நாகேஸ்வரா, ஸ்ரீ ராமேஸ்வரா, ஸ்ரீ மல்லிகார்ஜுனா, ஸ்ரீ மஹாகாலேஸ்வரா, ஸ்ரீ சண்டிகேஸ்வரா, ஸ்ரீகால பைரேஸ்வரா ஆகிய 11 ஜோதிர் லிங்கங்கள் உள்ளன. நர்மதா ஆற்றில் உள்ள கற்கள் மூலம், இந்த லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீ ஓம்காரேஸ்வரா லிங்கத்தின் கீழ் பகுதியில், ஒரு அங்குலம் அளவில், 2,000 சிறிய லிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மற்ற 11 ஜோதிர்லிங்கத்தின் கீழ் தலா 1,000 சிறிய லிங்கங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.


தியானம் செய்வதற்காக சர்வ தர்ம சமன்வியாய மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வருவோர், இங்கு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடலாம். அதுதவிர மத்சய நாராயணா கோவிலும் அமைந்து உள்ளது.


இங்குள்ள மணிக்கூண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து முறை ‘ஓம்’ என்று ஒலி எழுப்பும். 1,200 கிலோ எடை கொண்ட வெண்கல கோவில் மணி வைக்கப்பட்டு உள்ளது.


நாகதேவதை, வன துர்கை, கணபதி, முனீஸ்வரருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. விஸ்வாமித்ர வேத வித்யாலயா சார்பில் சமஸ்கிருதம், வேதம், ஆகம பாடம் கற்றுத் தரப்படுகின்றன.


கோ சாலையும் உள்ளது. இங்குள்ள பசுக்கள் பராமரிப்பதுடன், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரையிலும்; ஞாயிறு, விடுமுறை நாட்களில் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும்; அதுபோன்று கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள், தீப உத்சவம், ஹோமம் நடத்தப்படும். இம்மாதத்தில் நான்கு சோமவாரத்திலும், 12 ஜோதிர்லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை:  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்;திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருநாகேஸ்வரருக்கு வருடாபிேஷகம் ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் ... மேலும்
 
temple news
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar