Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சை தர்ம முனீஸ்வரர் கோயில் ... சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 2ம் நாள் தேரோட்டம் கோலாகலம் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 2ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரர் மூலவர் சன்னிதியில் ஜூன் 6ல் பாலாலயம் ஜூன் 5 முதல் வரை தரிசனம் இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரர் மூலவர் சன்னிதியில் ஜூன் 6ல் பாலாலயம் ஜூன் 5 முதல் வரை தரிசனம் இல்லை

பதிவு செய்த நாள்

31 மே
2025
11:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பர நாதர் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேம் முடிந்து, 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.


அன்னதானகூடம்: இதையடுத்து, தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, கடந்த 2023 ஜூன் 28ல் பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 28.48 கோடி ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் அலுவலகம், அன்னதான கூடம், குளியல் அறை கட்டுமானம் என, உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகளில் பல்லவ கோபுரம், சிவகங்கை தீர்த்தம், கம்பா நதி தீர்த்தம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல், கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் வடி கால்வாய் அமைத்தல் பணி நிறைவு பெற்றுள்ளது. இதில், தெற்கு ராஜகோபுரம் திருப்பணி முடியும் தருவாயில் உள்ளது, முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் மேல்தளம் பழுது பார்த்தல், மூன்றாம் பிரகாரம் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணி, இரண்டு, மூன்று, நான்காம் பிரகாரம் மதில்சுவர் பழுது பார்த்தல் பணி, நடராஜர் சன்னிதி உள்ளிட்ட பணிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.


கும்பாபிஷேகம்; தற்போது மூலவர் சன்னிதி திருப்பணிக்கான பாலாலயம் ஜூன் 6ம் தேதி காலை நடக்கிறது. இதனால், முதல் நாள் 5ம் தேதி முதல் திருப்பணி முடிந்து அக்., அல்லது நவம்பர் மாதத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் வரை, பக்தர்கள் மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாது. பாலாலயத்தையொட்டி, அத்திமர பால லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவருக்கு மாற்றாக அத்திமர பாலலிங்கத்தை வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar