Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி சோமவாரம்; சிவபெருமானுக்கு ... அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வீதி உலா அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரமாண்ட ஜெகன்னாதர் ரதத்திற்கு ‘சுகோய்’ போர் விமான டயர்கள்
எழுத்தின் அளவு:
பிரமாண்ட ஜெகன்னாதர் ரதத்திற்கு ‘சுகோய்’ போர் விமான டயர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
11:06

கொல்கட்டா; மேற்கு வங்கத்தில், ‘இஸ்கான்’ அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஜெகன்னாதர் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் பிரமாண்ட ரதத்திற்கு, 20 ஆண்டுகள் தேடுதலுக்குபின் ‘சுகோய்’ போர் விமானத்தின் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ‘இஸ்கான்’ எனப்படும், கிருஷ்ணர் வழிபாட்டுக்கான சர்வதேச சங்கத்தின் பிரிவு, மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இயங்கி வருகிறது.

கண்டறியும் பணி: கடந்த 1972ம் ஆண்டு முதல் இந்த இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஜெகன்னாதர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில், ஜெகன்னாதர் பவனி வரும் பிரமாண்ட ரதத்திற்கு, ‘போயிங் – 747 ஜம்போ ஜெட்’ விமானங்களுக்கு பயன்படுத்தும் டயர்கள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இது, கடந்த 2005ல் தேய்ந்து போனதை அடுத்து, ரதத்தின் எடையை தாங்கக்கூடிய வலிமை மிகுந்த டயர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. 20 ஆண்டுகள் தேடலுக்கு பின், எம்.ஆர்.எப்., நிறுவனம், ‘சுகோய்’ போர் விமானங்களுக்காக தயாரிக்கும் டயர்கள், இந்த ரதத்திற்கு சமீபத்தில் பொருத்தப்பட்டன.

18 டன் எடை; இது குறித்து இஸ்கான் கொல்கட்டா பிரிவின் செய்தித்தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறுகையில், ‘‘பிரமாண்ட ரதம், 9 டன் எடை உடையது. யாத்திரையின் போது ரதத்தில் அமர்ந்திருப்போர் எடைகளையும் சேர்த்து மொத்தம், 18 டன் எடையை தாங்கக் கூடிய டயர்கள் தேவைப்பட்டன. ‘‘எம்.ஆர்.எப்., நிறுவனத்திடம் இருந்து 1.80 லட்சம் ரூபாய் செலவில் நான்கு டயர்கள் வாங்கினோம். புதிய டயர்களுடன், ஜெகன்னாதர் ரதம் 24 கி.மீ., துாரம் சோதனை ஓட்டமாக சென்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) ... மேலும்
 
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண ... மேலும்
 
temple news
விருதுநகர்; வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நேற்று 2ம் தேதி ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார்  சனீஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி பூதவாகனத்தில் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar