பதிவு செய்த நாள்
17
டிச
2012
11:12
கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது.தமிழகளவில் பிரசித்தி பெற்ற கோவிலில், கடந்த 14 ம் தேதி காலை 5.30 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது. முதல்நாள் திருவிழாவில், அர்ச்சாவதாரத்தில், வெங்கடரமண ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வரும் 23ம் தேதி வரை, நாள்தோறும் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.வரும், 23ம் தேதி மோகினி அவதாரத்தில், வெங்கட ரமண ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 24ம் தேதி காலை 5.30 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.25ம் தேதி வைகுண்ட நாராயணன் நிகழ்ச்சியும், 2ம் தேதி ஆழ்வார் மோட்சமும் நடக்கிறது.ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.