பதிவு செய்த நாள்
17
டிச
2012
11:12
பாலக்கோடு: பாலக்கோடு, பனங்காடு விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாலக்கோடு மெயின்ரோட்டில் பழமைவாய்ந்த பனங்காடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த14ம் தேதி மாலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து யானைகள் அணிவகுப்புடன் தர்மராஜா கோவிலிருந்து சிறப்பு ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், 9.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 10.30 விமான கலசம் நிறுவுதல், 12 மணிக்கு தீபாராதனையும், மாலை, 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், இரவு, 8.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 6.30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், 8.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூராதீன இளையபட்டம் மருத்தாசல அடிகளார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் உள்பட பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர், புதூர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.