திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2025 10:06
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா நடந்தது. நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனைக்கு பின் திருஞானசம்பந்தர் உற்ஸவப்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.