Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... ஆரணி கோதண்டராமர் கோவில் புனர்பூச நட்சத்திர பூஜை; ஊஞ்சல் தாலாட்டு ஆரணி கோதண்டராமர் கோவில் புனர்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவக்கம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவக்கம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2025
12:06

ஒடிசா;  பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண கோயிலுக்கு வெளியே ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.


ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. பூரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் இன்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும். புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் வாழ்த்துத்களை தெரிவித்துள்ளனர்.


ரத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர் கூறியதாவது;  "இன்று ஜெகந்நாதரைப் பார்ப்பது எனக்கு மிகவும் பாக்கியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது பக்தர்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. வருடத்திற்கு ஒரு முறை, ஜெகந்நாதர் தனது அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் அளிக்கிறார்" என்று பரவசத்துடன்கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar