Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் ... புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவக்கம்; பக்தர்கள் பரவசம் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2025
11:06

திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் இன்று காலை துவங்கியது. பிரம்மச்சாரிகள் வழிபாடு, கஜ பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை வழிபாடு நடந்தது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7ம்தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பெருந்திட்ட வளாக பணிகளும், பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது.யாகசாலை பந்தலில் 76 ஓமகுண்டங்கள் அமைக்கப்படுகின்றன. மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் இன்று காலை துவங்கியது. பிரம்மச்சாரிகள் வழிபாடு, கஜ பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 1ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar