Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவில் ... பொன்னர் சங்கர் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு விழா பொன்னர் சங்கர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை வழங்கிய நடிகை திரிஷா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை வழங்கிய நடிகை திரிஷா

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2025
12:06

அருப்புக்கோட்டை; தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷன் செல்வ விநாயகர் கோயிலுக்கு பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் சார்பில் 6 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட கஜா என்ற இயந்திர யானை வழங்கப்பட்டது.


அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்ட லிங்க ஆதிசேஷன் செல்வ விநாயகர் கோயிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலுக்கு யானை வாங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து யானை ஆசி வழங்குவது போல் சிலை வைக்க முடிவு செய்தனர்.இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் ‘பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா’ அமைப்பை அணுகினர். அந்த அமைப்பு, நடிகை திரிஷா மற்றும் சிலர் சேர்ந்து ரூ. 6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட கஜா என்ற இயந்திர யானையை கோயிலுக்கு வழங்கினர்.


இதுகுறித்து பீப்பிள்ஸ் பார் கேட்டில் இன் இந்தியா நிறுவனர் அருண்பிரசாத் கூறியது: 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடை உள்ள இந்த இயந்திர யானையை கேரளாவில் உள்ள சாலக்குடியில் 4 இளைஞர்கள் உருவாக்கினர். சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும். காதுகள், துதிக்கை, தலை அசையும் வகையில் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் மீது தண்ணீர் பீச்சியடிக்கும் அமைப்பும் உள்ளது. மின்சாரத்திலும், பேட்டரியிலும் இயங்கும். முழுவதும் ரப்பர், சிலிக்கான் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்க கேட்டபோது அரசிடம் இருந்து முறையான பதில் இல்லை. இந்த கோயில் நிர்வாகிகள் கேட்டதால் இயந்திர யானையை தமிழகத்தில் முதல்முறையாக இங்கு வழங்கியுள்ளோம். யானை இல்லாத மேலும் பல கோயில்களுக்கு இதுபோன்று இயந்திர யானை வழங்க திட்டமிட்டுள்ளோம். நடிகை திரிஷா எங்கள் அமைப்பின் ஸ்பான்சர் ஆக உள்ளார், என்றார். இயந்திர யானை அறிமுக விழா நேற்று நடந்தது. ஏ.எஸ்.பி., மதிவாணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டனர். மக்கள் மலர் தூவி யானையை வரவேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar