பதிவு செய்த நாள்
02
ஜூலை
2025
06:07
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடந்தது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் உத்திர நட்சத்திரமான இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், 6:00 மணிக்கு கணபதி பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.