மயிலம்; மயிலம் கோவிலில் நடந்த ஆனித் திருமஞ்சன உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம், பொம்மபுர ஆதீன திருமடத்தில் நடராஜப்பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது. சிவகாமியம்மன் சமேத நடராஜபெருமானுக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பால சித்தர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியசுவாமி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், மகாதீபாரதனை நடந்தது.