பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
12:07
தொண்டாமுத்தூர்; கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, வெகு சிறப்பாக நடந்தது. கலிக்கநாயக்கன்பாளையம், வாய்க்கால் வழித்தடத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 30ம் தேதி, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, காலையும், மாலையும் வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம், விமான கலசம் நிறுவுதல், அடியார்கள் வேள்வி, மூலமூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திகளுக்கு காப்பு கட்டுதல், நான்காம் கால வேள்வி வழிபாடு நடந்தது. காலை, 6:00 மணிக்கு, வேள்விசாலை மண்டபத்தில் இருந்து, கலசகுடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 6:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், விமான கலசங்கள், பத்ரகாளியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. அதன்பின், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.