Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் ... திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய சம்பிரதாயப்படி ராமேஸ்வரம் கோவிலுக்கு அர்ச்சகர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:
பாரம்பரிய சம்பிரதாயப்படி ராமேஸ்வரம் கோவிலுக்கு அர்ச்சகர்கள் நியமனம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2025
06:07

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில், பாரம்பரிய முறைப்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு 6 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.


ராமேஸ்வரம் கோவிலில் காலியாக இருக்கும் அர்ச்சகர் பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்து கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த மாதம்( மே 15) உத்தரவிட்டது. இக்கோவிலில் கருவறையில் பூஜை செய்வதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 


பல தலைமுறைகளாக


ராமேஸ்வரத்தில் வாழும் மராத்திய அந்தண இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கருவறையில் சென்று மூலவருக்கு வழிபாடுகள் செய்யும் உரிமை உள்ளவர்கள். இவர்கள் சிருங்கேரி ஜகத்குருவிடம் தீட்சை பெற்ற பின்புதான் இக்கோயிலில் குருக்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த சமூகத்தினர் பல தலைமுறைகளுக்கு மேலாக ராமேஸ்வரத்திலேயே சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளிடம் தீட்சை; கருவறை பூஜை செய்பவர்கள் நேரடியாக குருக்கள் பணியில் நியமனம் செய்யப்படுவதில்லை. மராத்தி பிராமண இனத்தைச் சேர்ந்தவர்களில் தேவையான கல்வித் தகுதி , வேத ஆகம கல்வி பெற்றுள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு உட்பட்டிருப்பவர்கள் விண்ணப்பித்தல் மற்றும் நிர்வாக பரிசீலனையின் அடிப்படையில் முதலில் கைங்கரியம் பதவியில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.


பரிந்துரை கடிதம்; பின்னர் குருக்கள் ஓய்வு பெறும் சமயம், கைங்கரியம் ஆக பணிபுரிபவர்கள் சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளிடம் சென்று நேரில் மந்திர தீட்சை பெற்று வரவேண்டும். கைங்கரியம் ஆக பணிபுரிந்து வருபவர்கள் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகளிடம் தீட்சை பெற விரும்புவதை அங்கீகரித்து அவருக்கு சிருங்கேரி சென்று வர அனுமதியளிக்கும் கடிதம் திருக்கோயில் இணை / செயல் ஆணையர் மூலம் வழங்கப்பட்டு, சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு தீட்சாபிஷேகம் செய்து வைக்கும்படி பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்பின் சுவாமிகள் குறித்துத் தரப்படும் தேதியில் அர்ச்சகர்கள் சிருங்கேரி சென்று அங்கே அவர்களுக்கான ஹோமங்கள், அபிஷேகம் ஆகியவை அங்குள்ள முந்தைய ஆசார்யார்களின் அதிஷ்டான வளாகத்தில் விரிவாக நடைபெறும். பின்னர் அவருக்கு மந்தர தீட்சையும், தீட்சா பெயரும் சுவாமிகளே நேரிடையாக அளித்து ஆசீர்வதிப்பார்.


மந்திர உபதேசம்; இந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில், கணேஷ் நாராயண குண்டேவிற்கு 2016ம் ஆண்டும், சந்தோஷ் ஜோஷிக்கு 2017ம் ஆண்டும், சரவணன் சங்கர ரானடேவிற்கு 2021ம் ஆண்டும், கிரி ஜோஷி, பால கங்காதர ரானடே மற்றும் சரத்சந்திர ராஸ்தே ஆகிய அர்ச்சகர்களுக்கு 2022ம் ஆண்டும், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மந்திர உபதேசம் செய்வித்து தீட்சா நாமமும் வழங்கினார்.


இவர்கள் முன்னோர்கள் பெற்ற தீட்சா விபரங்கள்: கணேஷ் நாராயண குண்டேவின் தந்தை ரகுனாத நாராயண குண்டே மற்றும் சந்தோஷ் ஜோஷியின் தந்தை கிருஷ்ண பலிராம் ஜோஷி ஆகியோர் ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யாதீர்த்த மஹா சுவாமிகளிடம் 1988 ம் ஆண்டும், பால கங்கதார ரானடேவின் கொள்ளுத்தாத்தா பக்சி சத்யநாராயணா பட்டர், ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகர பாரதீ மஹா சுவாமிகளிடம் 1924ம் ஆண்டும், கிரிஜோஷியின் தந்தை விஸ்வநாத ராமகிருஷ்ண ஜோஷி, ஜகத்குரு அபினவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகளிடம் 1988ம் ஆண்டும் தீட்சை பெற்றனர். இதேபோல, தாத்தா புருஷோத்த தீக்ஷிதர் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகர பாரதீ மஹா சுவாமிகளிடம் 1944ம் ஆண்டும், சரத்சந்திர ராஸ்தேவின் தாத்தா ராமசந்திர பட் ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யாதீர்த்த மஹா சுவாமிகளிடம் 1964 ம் ஆண்டும், கொள்ளுத் தாத்தா சிவராலிங்க பட் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகர பாரதீ மஹா சுவாமிகளிடம் 1937ம் ஆண்டும் தீட்சை பெற்றனர்.  மேலும், சரவணன் சங்கர ரானடேவின் தந்தை சங்கர ராமனாத பட்டருக்கு ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யாதீர்த்த மஹா சுவாமிகளிடம் 1994 ம் ஆண்டும், தாத்தா ரகுனாத ராமனாத பட்டருக்கு ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகர பாரதீ மஹா சுவாமிகளிடம் 1952ம் ஆண்டும் தீட்சை பெற்றுள்ளனர்.


பாக்கியம்; முதல்வரை சந்தித்த பின் அர்ச்சகர்கள் கூறியதாவது: இக்கோவிலின் சம்ப்ரதாயப்படி நாங்கள் சிருங்கேரி சுவாமிகளிடம் தீட்சை பெற்றும் பல வருடங்களாகக் காத்திருந்தோம். தற்போது எங்களுக்கு பணி உத்தரவு வழங்கிய முதல்வருக்கும், அமைச்சருக்கும் மற்றும் அறநிலையத்துறை ஆணையர், கோவில் துணை ஆணையர் மற்றும் பணியாளார்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. இக்கோவிலின் பாரம்பரியத்தினை காத்து எங்கள் பணியினை மேற்கொள்ள உள்ளோம்.


சிருங்கேரி சாரதா பீடத்தின் பரம்பரை பரம்பரையாக சீடர்களாக இருந்து, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் அவர்களிடம் தீட்சை பெற்ற நாங்கள் அவரது சீடர் ஜகத்குரு ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம் ராமேஸ்வரம் வரும் தினமான 5 மற்றும் 6ம் தேதியில் அவரது முன்னிலையில் பணியில் சேருவதை பாக்கியமாக கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். அர்ச்சகர்கள் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன்,அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar