ஆஷாடன நவராத்திரி விழா நிறைவு; வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 11:07
தேவகோட்டை; ஆஷாடன நவராத்திரி விழாவை வாராஹி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மகா வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு ஆனி மாதம் பிரதமை திதி முதல் நவமி திதி வரை தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று வாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் , அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள அத்தி வாராஹி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு தினமும் சிறப்பு ஹோமம் தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.